ADDED : செப் 29, 2026 05:47 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்; கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பஞ்-சப்பட்டி, வீரியபாளையம், கொமட்டேரி, வயலுார், நடுப்பட்டி, பாப்பகாப்பட்டி, திருமே-னியூர், போத்துராவுத்தன்பட்டி, கரட்டுப்பட்டி, லட்சுமணம்பட்டி, பழையஜெயங்கொண்டம், கோவக்குளம் ஆகிய பகுதிகளில், நேற்று முன்-தினம் இரவு பரவலாக மழை பெய்தது. மழை காரணமாக, மானாவாரி நிலங்களில் விவசா-யிகள் கால்நடைகளுக்கு தீவன பயிர்களாக சோளம் விதைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும், மழை காரணமாக மானாவாரி நிலங்-களில் உள்ள துவரை செடிகள் செழிப்பாக வளர்ந்து வருகிறது. இரவு நேரத்தில் மழை பெய்-ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. மேலும், மழையால் விவசாயிகள் மகிழ்ச்சிய-டைந்தனர்.------------
