தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/மாவட்டத்தில் 3ம் நாளாக பரவலாக மழைப்பொழிவு

மாவட்டத்தில் 3ம் நாளாக பரவலாக மழைப்பொழிவு

மாவட்டத்தில் 3ம் நாளாக பரவலாக மழைப்பொழிவு


ADDED : அக் 19, 2026 06:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2026 06:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்,:தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை, தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. அதிலும், கடந்த, மூன்று தினங்களாக அநேக இடங்களில் மழை பொழிகிறது. இவ்வளவு நாள் வாட்டி வதைத்த வெயிலுக்கு இதமாக இந்த மழை இருந்து வருகிறது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் பல இடங்களில் மழை கொட்டியது. அதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் போலவே மாலையில் கருமேகங்கள் சூழ தொடங்கி, மழை கொட்ட தொடங்கியது.

இதனால் இந்த பகுதிகளில் எல்லாம் மழைநீர் ஆறுபோல ஓடியது. சில தெருக்களில், தாழ்வான பகுதிகளில் குளம்போல மழைநீர் தேங்கியதை பார்க்க முடிந்தது. கரூர் மாவட்டத்தில், நேற்று காலை, 8:00 மணி வரை, கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மி.மீ.,) கரூர், 6.2, அரவக்கு-றிச்சி, 4.2, அணைப்பாளையம், 7.2, க.பரமத்தி, 2.6, தோகைமலை, 3.8, மாயனுார், 1, பஞ்சப்பட்டி, 2, கடவூர், 7 பாலவிடுதி, 9, மயிலம்பட்டி, 6 ஆகிய அளவு பதிவாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 4.08 மி.மீ., மழை பதிவானது.

கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 9,604 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 9,115 கன அடியாக குறைந்தது. அதில், டெல்டா மாவட்டங்களில், சம்பா சாகுப-டிக்காக காவிரியாற்றில், 9,004 கன அடி தண்-ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 230 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us