ADDED : டிச 15, 2024 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், டிச. 15-
கரூர் அருகே மனைவியை காணவில்லை என, போலீசில் கணவர் புகார் செய்துள்ளார்.
கரூர் மாவட்டம், வடக்கு காந்தி கிராமம் காமதேனு நகரை சேர்ந்தவர் தென்றல், 71; எல்.ஐ.சி., ஏஜென்ட். இவருடைய மனைவி ஜெயராணி, 67; கடந்த, 11ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜெயராணி, இதுவரை வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த ஜெயராணியின் கணவர் தென்றல் போலீசில் புகார் செய்தார்.
பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.