/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சொத்துக்களை பெயர் மாற்றம் செய்ய மறுத்த மனைவிக்கு கத்திக்குத்து
/
சொத்துக்களை பெயர் மாற்றம் செய்ய மறுத்த மனைவிக்கு கத்திக்குத்து
சொத்துக்களை பெயர் மாற்றம் செய்ய மறுத்த மனைவிக்கு கத்திக்குத்து
சொத்துக்களை பெயர் மாற்றம் செய்ய மறுத்த மனைவிக்கு கத்திக்குத்து
ADDED : ஏப் 28, 2024 04:18 AM
அரவக்குறிச்சி,: மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.
அரவக்குறிச்சி அருகே நவமரத்துப்பட்டியை சேர்ந்தவர் எழில் அன்பன், 56. இவரது இரண்டாவது மனைவி பழனியம்மாள், 45. இவர்களுக்கு, 23 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக குடும்ப தகராறு காரணமாக, இருவரும் தனித்தனியே வசித்து வருவதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று காலை, 10:00 மணியளவில் சூரிபள்ளி பேருந்து நிறுத்தம் அருகே பழனியம்மாள் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த எழில் அன்பன், பழனியம்மாளிடம் சொத்துக்களை தனது பெயருக்கு பெயர் மாற்றம் செய்து தர கேட்டுள்ளார். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த எழில் அன்பன், பழனியம்மாளை தகாத வார்த்தை பேசி, மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார். இதில் பழனியம்மாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பழனியம்மாள் அளித்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் எழில் அன்பனை கைது செய்தனர்.