ADDED : மார் 11, 2026 08:59 AM
அ நிறம் | அளவு
பவானி:சேலம்
மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள கண்ணாமூச்சியை சேர்ந்தவர்
சிவசந்திரன், 33; கட்டட தொழிலாளி.
இவரின் மனைவி செல்வி, 32;
தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை
அருகே ஆணைக்கவுண்ட-னுாருக்கு தக்காளி பழம் பறிக்கும் வேலைக்கு, செல்வி
சென்றார். அதன் பின் வீடு திரும்பவில்லை. * அம்மாபேட்டை அருகே
ஆணைக்கவுண்டனுாரை சேர்ந்த கட்டட மேஸ்திரி கேசவன், 43; இவரின் மனைவி
கோமதி, 35; குருவரெட்டியூரில் ஒரு டைல்ஸ் கடையில் வேலை பார்க்கிறார்.
மூன்று தினங்களுக்கு முன் வேலைக்கு சென்றவர் வீடு திரும்ப-வில்லை.
கணவர்களின்
புகாரின்படி, அம்மாபேட்டை போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.
