ADDED : ஏப் 20, 2026 05:17 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை
அடுத்த வாழ்வார்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன், 34; பால்
வியாபாரி. இவரது மனைவி சத்யபிரியா, 27; இவர், மலைக்கோவிலுார்
பகுதியில் உள்ள பஞ்சு மில்லில், வேலைக்கு சென்று வந்தார்.
கடந்த, 15 காலை,
7:00 மணிக்கு, பஞ்சு மில்லுக்கு வேலைக்கு சென்ற சத்யபிரியா மீண்டும்
வீடு திரும்பவில்லை. உறவினர்களிடம் விசாரித்தும் எந்த தகவலும்
கிடைக்கவில்லை. லோகநாதன் கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி
போலீசார் வழக்குப்பதிந்து, காணாமல் போன சத்யபிரியாவை தேடி வருகின்றனர்.
