ADDED : ஜூலை 01, 2026 05:37 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை
அடுத்த பிச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த், 36, விவசாய
தொழிலாளி. இவருடைய மனைவி ராஜலட்சுமி, 30. கடந்த, 29ம் தேதி இரவு 7:30
மணியளவில் வேறு நபருடன் பேசிக்கொண்டு இருந்தார்.
இதுகுறித்து ஆனந்த்
அறிவுரை வழங்கினார். இந்நிலையில் வெளியே சென்றவர் வெகு நேரமாகியும்
வீட்டுக்கு வரவில்லை. தனது மனைவியை காணவில்லை என, ஆனந்த் கொடுத்த
புகாரின்படி, மாயனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி
வருகின்றனர்.
