தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா?

க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா?

க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா?


ADDED : ஜூன் 02, 2025 03:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2025 03:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி: தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக அணைக்கவும், உயிரிழப்புகளை தடுக்கவும், க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கரூரிலிருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வளர்ந்து வரும் நகராக க.பரமத்தி உள்ளது. க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில், 30 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலையையொட்டி கிராம பஞ்சாயத்துகள் உள்ளதால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. சாலை விபத்து, தீ விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க, க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் இல்லை.கரூர், அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வருகின்றன. சம்பவ இடத்திற்கு செல்ல நீண்ட நேரம் ஆவதால் உயிர் சேதம், பொருட்சேதம் அதிகஅளவில் ஏற்படுகிறது. எனவே, க.பரமத்தி பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us