தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா?

க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா?

க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா?


ADDED : ஜூலை 15, 2026 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2026 05:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி:தீவிபத்து ஏற்பட் டால் உடனடியாக அணைக்கவும், உயிரிழப்புகளை தடுக்கவும், க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்குமாறு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூரிலிருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், வளர்ந்து வரும் நகராக க.பரமத்தி உள்ளது. க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில், 30 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலையையொட்டி கிராம பஞ்.,கள் உள்ளதால் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. சாலை விபத்து, தீ விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க, க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் இல்லை.

கரூர், அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வருகின்றன. சம்பவ இடத்திற்கு செல்ல நீண்ட நேரமாவதால் உயிர் சேதம், பொருட்சேதம் அதிகளவில் ஏற்படுகிறது. எனவே, க.பரமத்தி பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us