/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அய்யர்மலையில் கிரிவலம் மருத்துவ குழு அமைக்கப்படுமா?
/
அய்யர்மலையில் கிரிவலம் மருத்துவ குழு அமைக்கப்படுமா?
அய்யர்மலையில் கிரிவலம் மருத்துவ குழு அமைக்கப்படுமா?
அய்யர்மலையில் கிரிவலம் மருத்துவ குழு அமைக்கப்படுமா?
ADDED : டிச 16, 2024 03:58 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த சத்தியமங்கலம் பஞ்., அய்யர்மலை ரத்தினகி-ரீஸ்வரர் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்-பாட்டில் இருந்து வருகிறது.
இந்த கோவில் செங்குத்தாக, 2,017 படிகளை கொண்டுள்ளது. பவுர்ணமி அன்று பல்வேறு பகுதி மற்றும் மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் கோவில் குடிப்பாட்டுக்-காரர்கள் கோவில் மலை ஏறியும், கோவிலை சுற்றியும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மலையை சுற்றி பல்லாயிரக்கணக்-கான பக்தர்கள் கிரிவல பாதையில் வரும்போது உடல் உபாதை ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் நலன் கருதி, பவுர்-ணமி அன்று மாலையிலிருந்து இரவு வரை நடமாடும் மருத்துவ குழு அமைத்து, பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமென, கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.