/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உடையாப்பட்டியில் புதிய போலீஸ் ஸ்டேஷன் திறக்கப்படுமா?
/
உடையாப்பட்டியில் புதிய போலீஸ் ஸ்டேஷன் திறக்கப்படுமா?
உடையாப்பட்டியில் புதிய போலீஸ் ஸ்டேஷன் திறக்கப்படுமா?
உடையாப்பட்டியில் புதிய போலீஸ் ஸ்டேஷன் திறக்கப்படுமா?
ADDED : நவ 19, 2024 01:31 AM
உடையாப்பட்டியில் புதிய போலீஸ் ஸ்டேஷன் திறக்கப்படுமா?
கரூர், நவ. 19-
பண்ணப்பட்டி பஞ்சாயத்து, உடையாப்பட்டியில் புதிதாக, போலீஸ் ஸ்டேஷன் திறக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம், கடவூர் பஞ்சாயத்து யூனியனில், 20 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன. அதில், கடவூர், முள்ளிபாடி, பாலவிடுதி, மாவத்துார், செம்பியநத்தம் ஆகிய பஞ்சாயத்துக்கள், பாலவிடுதி போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் உள்ளது.
தரகம்பட்டி, ஆதனுார், கீழப்பகுதி, வாழ்வார் மங்கலம், தென்னிலை, வரவணை, மேலப் பகுதி, தேவர்மலை ஆகிய பஞ்சாயத்துக்கள் சிந்தாமணிபட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் உள்ளது. கீரனுார், பண்ணப்பட்டி, வெள்ளப்பட்டி பஞ்சாயத்துக்கள், தோகமலை போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் உள்ளது.
பாப்பயம்பட்டி, வடவம்பாடி பஞ்சாயத்துக்கள், லாலாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எல்லையிலும், மஞ்சநாயக்கன்பட்டி, மாயனுாரிலும், காளையாப்பட்டி, வெள்ளியணையிலும் உள்ளது. கடவூர் பஞ்சாயத்தை சேர்ந்த, 20 பஞ்சாயத்துக்கள், 6 போலீஸ் ஸ்டேஷன் பகுதியாக பிரிந்துள்ளது.
இதனால், கடவூர் பஞ்சாயத்து யூனியனை சேர்ந்த பொதுமக்கள், புகார் தர குறைந்தப்பட்சம், 15 கிலோ மீட்டர் துாரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், விபத்து, தற்கொலை, கொலை சம்பவங்கள் நடந்தால் சம்பவ இடத்துக்கு, போலீசார் செல்லவும் தாமதம் ஆகிறது.
எனவே, காளையாப்பட்டி, மஞ்சநாயக்கன் பட்டி, பாப்பயம்பாடி, வடவம்பாடி, வெள் ளப்பட்டி, கீரனுார் மற்றும் பண்ணப்பட்டி ஆகிய பஞ்சாயத்துக்களை இணைத்து உடை யாப்பட்டியில் புதிய போலீஸ் ஸ்டேஷன் திறந்தால் அப்பகுதியினருக்கு உதவியாக இருக்கும் என, அப்பகுதியினர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:
திருச்சி டி.ஐ.ஜி., யாக, பொன் மாணிக்க வேல் இருந்தபோது, குறைகேட்பு நிகழ்ச்சிக்காக, கரூர் எஸ்.பி., அலுவலகம் வந்தார். அப்போது, உடையாப்பட்டியில் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க, பல்வேறு கிராம மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், நிறைவேறவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன், பண்ணப்பட்டி பஞ்சாயத்தில் நடந்த கிராம சபை கூட்ட த்தில், புதிய போலீஸ் ஸ்டேஷன் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கரூர் அருகே, பசுபதிபாளையத்தை, இரண்டாக பிரித்து, தான்தோன்றிமலை போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட்டது. தற்போதைய தி.மு.க., ஆட்சியில் குளித்தலையை பிரித்து, நங்கவரம் போலீஸ் ஸ்டேஷன் அமைத்தும் செயல்பாடடுக்கு வரவில்லை. மக்கள் நலனுக்காக உடையாப்பட்டியிலும் போலீஸ் ஸ்டேஷன் திறக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.