தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வெயில் தாக்கம் அதிகரிப்பு சோலார் கேப் வழங்கப்படுமா?

வெயில் தாக்கம் அதிகரிப்பு சோலார் கேப் வழங்கப்படுமா?

வெயில் தாக்கம் அதிகரிப்பு சோலார் கேப் வழங்கப்படுமா?


ADDED : மார் 02, 2026 06:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 06:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கோடை காலத்தையொட்டி, வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சோலார் கேப் வழங்க வேண்டும் என, கரூர் மாவட்ட போக்குவரத்து போலீசார் எதிர்பார்க்கின்றனர்.தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், போக்குவரத்து பணியில் ஈடுபடும் போலீசாருக்காக அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான நிழற்கூடங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன.

இந்நிலையில், கொளுத்தும் வெயிலில் கரூர், குளித்தலை, அரவக்குறிச்சியில் போக்குவரத்து பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். வெயில் தாக்கத்தில் இருந்து காத்துக்கொள்ள, சோலார் கேப் வழங்கப்படாததால், கரூர் மாவட்ட போக்குவரத்து போலீசார் அதிருப்தியில் உள்ளனர்.

நீர்மோர் கிடைக்குமா?

கடந்த, 2011ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கோடைகாலத்தில் போக்குவரத்து போலீசாருக்கு, நாள்தோறும் நீர்மோர் வழங்க உத்தரவிட்டார். அந்த நடைமுறை கடந்த, 2021 வரை, அ.தி.மு.க., ஆட்சியில் தொடர்ந்து இருந்தது. கரூர் மாவட்டத்தில், கடந்தாண்டு, ஒரு சில நாட்கள் மட்டும் நீர்மோர் வழங்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் வழங்கியதுபோல், வரும் கோடைக்காலத்தில் நாள்தோறும், நீர்மோர், எலுமிச்சை ஜூஸ் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில், கரூர் மாவட்ட போக்குவரத்து போலீசார் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us