ADDED : அக் 17, 2026 07:28 AM
குளித்தலை:குளித்தலை
நகர பகுதிக்கு என, தனியாக துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என,
பல்வேறு தரப்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த தி.மு.க., ஆட்சியில் ராஜேந்திரம் கிராமம்
கீழதண்ணீர்பள்ளியில் துணை மின் நிலையம் அமைப்பதற்காக நிலம்
கையகப்படுத்தப்பட்டது. ஆனால் அந்த இடம், வனத்துறைக்கு சொந்தமானது என தெரிய வந்தது.வனத்துறைக்கு
மாற்றாக வருவாய் துறைக்கு சொந்தமான நிலம் வழங்கப்படும் எனவும்
தெரிவிக்கப்பட்டது. ஆனால், துணை மின் நிலையம் அமைக்கப்படாமல்
இழுபறி நீடித்து வருகிறது.
இது குறித்து, குளித்தலை ஓய்வு பெற்ற
அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் ஜெயமூர்த்தி, கருணாநிதி, மாணிக்கம்
மற்றும் உறுப்பினர்கள், கரூர் மாவட்ட தலைமை பொறியாளர்
கலைச்செல்வியிடம் கோரிக்கை
மனு அளித்தனர்.
அப்போது கலைச்செல்வி கூறியதாவது:
துணை
மின் நிலையத்திற்கு உரிய இடத்தை பெற்றுத் தர வேண்டும் என
வருவாய்த்துறை, வனத்துறையிடம் வலியுறுத்தி வருகிறோம். இதுவரை
எங்களுக்கு நிலம் ஒப்படைக்கவில்லை. இடம் பெறுவதற்கான
முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். விரைவில் துணை மின் நிலையம் அமைக்க
நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.
