/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பூங்காவில் சமூக விரோத செயல்கள் நடவடிக்கை எடுக்கப்படுமா?
/
பூங்காவில் சமூக விரோத செயல்கள் நடவடிக்கை எடுக்கப்படுமா?
பூங்காவில் சமூக விரோத செயல்கள் நடவடிக்கை எடுக்கப்படுமா?
பூங்காவில் சமூக விரோத செயல்கள் நடவடிக்கை எடுக்கப்படுமா?
ADDED : செப் 28, 2024 01:08 AM
பூங்காவில் சமூக விரோத செயல்கள்
நடவடிக்கை எடுக்கப்படுமா?
கரூர், செப். 28-
கரூர் மாவட்டம், நெரூரில் பிரசித்தி பெற்ற சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானம் உள்ளது. அதில் பவுர்ணமி மற்றும் வியாழக் கிழமை சிறப்பு அபிேஷகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்து வருகிறது. அப்போது, தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.
இதனால், சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானம் அருகே, காவிரியாற்றின் கரையோர பகுதியில், சுற்றுலா துறை சார்பில், பல ஆண்டுகளுக்கு முன் பூங்கா அமைக்கப்பட்டது. அதை, உள்ளூர் பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், பூங்காவில் இருந்த விளையாட்டு உபகரணங்கள் தற்போது சேதம் அடைந்துள்ளது. மேலும், பூங்காவில் மின் விளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில் மது அருந்துதல் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்கள் நடந்து வருகின்றன. அந்த பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்ப டும் அபாயம் உள்ளது. எனவே, சுற்றுலா பூங்காவை சீரமைத்து, மின்விளக்கு அமைக்க கரூர் மாவட்ட நிர்வாகம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.