/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெரூர் அக்ரஹாரம் வாய்க்காலில் படிக்கட்டுகள் அமைக்கப்படுமா
/
நெரூர் அக்ரஹாரம் வாய்க்காலில் படிக்கட்டுகள் அமைக்கப்படுமா
நெரூர் அக்ரஹாரம் வாய்க்காலில் படிக்கட்டுகள் அமைக்கப்படுமா
நெரூர் அக்ரஹாரம் வாய்க்காலில் படிக்கட்டுகள் அமைக்கப்படுமா
ADDED : ஜன 28, 2025 07:09 AM
கரூர்: கரூர் மாவட்டம், நெரூர் அக்ரஹாரம் வழியாக செல்லும் வாய்க்காலில், படிக்கட்டுகள் மற்றும் பக்கவாட்டு சுவர் அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
நெரூர் அக்ரஹாரம் பகுதி வழியாக வாய்க்கால் செல்கிறது. இதன் இருபுறமும் அதிகளவு குடியிருப்புகள் உள்ளன. வாய்க்காலை இப்பகுதியினர் பயன்படுத்தி வருவதோடு, விவசாயத்துக்கும் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நிலையில், வாய்க்காலின் இருபுறமும் படிக்கட்டுக்கள் அமைத்து தருவதோடு, பழுதடைந்துள்ள பக்கவாட்டு சுவர்களையும் எழுப்பித் தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வாய்க்காலை பார்வையிட்டு மக்கள் நலன் கருதி, தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.