/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடிய விவகாரம் உதயநிதி அமைச்சர் பதவியை பறிப்பாரா முதல்வர்?'

ADDED : அக் 28, 2024 03:34 AM
கரூர்: ''அமைச்சர் பதவியில் இருந்து உதயநிதியை முதல்வர் ஸ்டாலின், டிஸ்மிஸ் செய்ய வேண்டும்,'' என, மாநில பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
கரூர் பா.ஜ., அலுவலகத்தில், நேற்று நடந்த உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை பார்வையிட வந்தவர், நிருபர்களிடம் கூறி-யதாவது:தமிழக கவர்னர் ரவி பங்கேற்ற துார்தர்ஷன் விழாவில், தமிழ்த்தாய் தவறாக பாடியதாக கூறி, அவர் மீது இனவாத தாக்கு-தலை, தி.மு.க.,- தி.க., நடத்தியது. முதல்வர் ஸ்டாலின், 'கவர்னர் ரவியை திரும்ப பெற வேண்டும்' என்றார்.
தற்போது துணை முதல்வர் உதயநிதி பங்கேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டு முறை தவறாக பாடப்பட்டுள்ளது. அதற்கு துணை முதல்வர் உதயநிதி, 'டெக்னிக்கல் பால்ட்' என கூறுகிறார். தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதாக கூறி, கவர்னரை திரும்ப பெற வலியுறுத்திய ஸ்டாலின், துணை முதல்வர் பதவியில் இருந்து உதயநிதியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
தமிழகம் முழுவதும் கோவில்களில் கட்டணம் என்ற பெயரில், பக்தர்கள் சுரண்டப்படுகின்றனர். பா.ஜ., அமைப்பு தேர்தல் முடிந்த பிறகு, தமிழக கோவில்களில், கட்டணம் கொடா இயக்கம் நடத்தப்படும்.
கரூரில் மொபைல் கடையில், ஹிந்தி எழுத்தை வி.சி.க.,வினர் மை ஊற்றி அழித்துள்ளனர். இவர்கள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவருடன் கரூர் மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில்நாதன், செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.