/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வடிகால் கால்வாய் சுத்தம் செய்யப்படுமா?
/
வடிகால் கால்வாய் சுத்தம் செய்யப்படுமா?
ADDED : ஜூன் 02, 2025 04:04 AM
கரூர்: கரூர், சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் மழைநீர் வடிகால் வாய்க்கால் செல்கிறது. இந்த கால்வாயில் குப்பை, கழிவு தேங்கியுள்ளது. வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீர் பல இடங்களில் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளதோடு, துர்நாற்றமும் வீசுகிறது.
பிளாஸ்டிக் உள்பட கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால், கால்வாயில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. மழை பெய்யும்போது, சாலையில் கழிவுநீர் செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து, பலமுறை புகாரளித்தும் பலனில்லை. சாக்கடை கால்வாயில் உள்ள கழிவுகளை உடனடியாக அகற்ற துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.