ADDED : மே 08, 2026 03:10 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர், சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் மழைநீர் வடிகால் கால்வாய் செல்கிறது. இதில் குப்பை, கழிவு தேங்கியுள்ளது. வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீர் பல இடங்களில் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளதோடு, துர்நாற்றமும் வீசுகிறது.
பிளாஸ்டிக் உள்பட கழிவுகள் கொட்டப்பட்டு வருநதால், கால்வாயில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழை பெய்யும் போது, சாலையில் கழிவுநீர் செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. சாக்கடை கால்வாயில் உள்ள கழிவுகளை, உடனடியாக அகற்றி துார் வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
