/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உழவர் சந்தை வழியாக மினி பஸ் இயக்கப்படுமா
/
உழவர் சந்தை வழியாக மினி பஸ் இயக்கப்படுமா
ADDED : ஜூலை 28, 2025 08:02 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த முசிறியில் இருந்து, நான்கு மினி பஸ்கள் அரசு அனுமதி பெற்று இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மினி பஸ்கள், கடம்பர்கோவில் மற்றும் நகராட்சி புறவழிச்சா-லையில் உழவர் சந்தை, சிறுவர் பூங்கா வழியாக பஸ் ஸ்டாண்ட் மற்றும் புறவழிச்சாலையில் ரயில் நிலையம், தெப்பக்குளம், பெரியபாலம் வரை செல்ல அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆனால், பர்மிட் பெற்ற வழியில் இயக்காமல், நேரடியாக நெடுஞ்சாலை வழியாக சென்று, பஸ் ஸ்டாண்ட், அரசு மகளிர் பள்ளி வரை மட்டுமே இயக்கப்பட்டு திரும்பி செல்கிறது. இதனால் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் பயணிகள் காத்திருந்து ஏமாற்றமடைகின்றனர். சம்பந்தப்-பட்ட அதிகாரிகள் கவனித்து, பர்மிட் பெற்ற வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.