ADDED : செப் 03, 2026 06:15 AM
குளித்தலை:திருச்சாப்பூரில்
புதிதாக கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை திறந்து, மக்கள்
பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
குளித்தலை அடுத்த பொய்யாமணி பஞ்.,
திருச்சாப்பூரில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து
வருகின்றனர். இவர்களின் பயன்பாட்டிற்காக, துாய்மை பாரத இயக்கம்
சார்பில்-2023--24ல், ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் சிறிய சுகாதார வளாகம்
கட்டும் பணி முடிந்து ஓராண்டை கடந்து விட்டது. ஆனால் இன்றும்
திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது.
கட்டடத்தின் முன் பகுதி முழுவதும் செடி, கொடிகள் படர்ந்து காணப்படுவதால் விஷ
ஜந்துக்கள் நடமாட்டம் காணப்படுகிறது.
இப்பகுதி
மக்கள் இயற்கை உபாதைகளை கழிக்க, திறந்தவெளியில் சென்று
வருகின்றனர். எனவே கட்டி முடிக்கப்பட்டு, மூடப்பட்டிருக்கும்
சுகாதார வளாகத்தை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, மக்கள்
பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
