/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தெரசா கார்னரில் புதிய வேகத்தடை வெள்ளைக்கோடு வரையப்படுமா
/
தெரசா கார்னரில் புதிய வேகத்தடை வெள்ளைக்கோடு வரையப்படுமா
தெரசா கார்னரில் புதிய வேகத்தடை வெள்ளைக்கோடு வரையப்படுமா
தெரசா கார்னரில் புதிய வேகத்தடை வெள்ளைக்கோடு வரையப்படுமா
ADDED : அக் 27, 2024 03:54 AM
கரூர்: கரூர் தெரசா கார்னரில் புதிய வேகத்தடையில் வெள்ளைக்-கோடு வரை வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கரூர் திருச்சி சாலை சுங்ககேட் அருகில் தெரசா கார்னர் சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு, கொளந்தனுார் பிரிவு சாலை இருப்பதால், வாகனங்-களின் வேகத்தை கட்டுப்படுத்திட வேகத்தடை அமைக்கப்பட்-டுள்ளது. வேகத்தடை அமைத்து இரண்டு நாள் கடந்த நிலையில், இன்னும் வெள்ளை வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால், வாகனங்களில் செல்பவர்கள் புதிதாக அமைக்கப்பட்-டுள்ள வேகத்தடை தெரியாமல் தடுமாறி வருகின்றனர். அதிலும், இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழும் சம்பவங்-களும் நடந்துள்ளன.இந்த சாலையில் வேகத்தடையில், வெள்ளை வர்ணத்தை பூசி, சாலைகளில் வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் தேவை-யான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். நெடுஞ்சாலை-துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.