/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனம் போலீசார் உரிய விசாரணை நடத்துவார்களா?

ADDED : செப் 21, 2024 02:46 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில், சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனங்களை கண்டுப்பிடிக்க, போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும்.
கரூர் மாவட்டத்தில், திருச்சி சாலை, மதுரை சாலை கோவை சாலை, ஈரோடு மற்றும் சேலம் சாலைகள் உள்ளன. இதனால் சாலைகளில், 24 மணி நேரமும் போக்குவரத்து பிஸியாக இருக்கும். இந்நிலையில், சமீபகாலமாக கரூர் மாவட் டத்தில், நடக்கும் பெரும்பாலான விபத்துகளை, அடையாளம் தெரியாத வாகனங்கள் மூலம் நடப்பதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணையை விரைவாக முடித்து விடுகின்றனர். விபத்து குறித்து போலீசார், உரிய வகையில் சட்டம்-ஒழுங்கு போலீசார் புலன் விசாரணை செய்வது இல்லை
என, பொது மக்கள் தரப்பில் இருந்து புகார் எழுந்தன. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இறந்தவர்கள் மற்றும்
காயமடைந்த-வர்களுக்கு, உரிய இழப்பீடு பெற முடியாத நிலை ஏற்படுகிறது. இரவு நேரத்தில் மட்டுமல்ல பகல் நேரத்திலும்,
நடக்கும் விபத்-துகள் கூட, அடையாளம் தெரியாத வாகனங்கள் மூலம் நடப்ப-தாக போலீசார் வழக்குப்பதிவு செய்கின்றனர். சாலை
விபத்து-களில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு, உரிய நிவாரணம் கிடைக்கும் வகையில், சாலை விபத்து குறித்து விசாரணை நடத்த
வரும், சட்டம் ஒழுங்கு போலீசார், உரிய முறையில் விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து வழக்குப் பதிவு
செய்ய வேண்டும்.இவ்வாறு தெரிவித்தனர்.