சாய்ந்த நிலையில் டிரான்ஸ்பார்மர் விபத்துக்கு முன் சீரமைக்கப்படுமா?
சாய்ந்த நிலையில் டிரான்ஸ்பார்மர் விபத்துக்கு முன் சீரமைக்கப்படுமா?
ADDED : மே 25, 2026 02:28 AM

கரூர்:கரூர் அருகே, மின் டிரான்ஸ்பார்மர் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
கரூர்
அருகே, ராமானுாரில் தனியார் பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள்,
ஓட்டல்கள், மருத்துவமனைகள் மற்றும் ஏராளமான வீடுகள் உள்ளன.
இதற்காக, தனியார் சாரதா பெண்கள் பள்ளி சாலை ஓரத்தில் மின்
டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு, மின் சப்ளை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிரான்ஸ்பார்மர் சாய்ந்த நிலையில், எந்த நேரத்திலும்
சரிந்து விழும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த
பொதுமக்கள், மின்வாரிய ஊழியர்களிடம் புகார் தெரிவித்தும்,
டிரான்ஸ்பார்மரை சரி செய்யவில்லைமேலும், ராமானுார் சாலை வழியாக
பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன. இதனால், சாய்ந்த நிலையில்
உள்ள டிரான்ஸ்பார்மரால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால்,
பொதுமக்கள் பீதியில் உள்ளனர். எனவே, தென்மேற்கு பருவமழை தொடங்கிய
நிலையில், கரூர் அருகே ராமானுாரில் சாய்ந்த நிலையில் உள்ள, டிரான்ஸ்
பார்மரை சரி செய்ய, கரூர் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது
அவசியம்.
