sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நெருங்கும் ஆடிப்பெருக்கு விழா நெரூரில் கழிப்பிடம், பூங்கா சீரமைக்கப்படுமா கரூர், ஜூலை 28- வரும் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, நெரூரில் காவிரி-யாற்று பகுதியில் உள்ள கழிப்பிடம் மற்றும் பூங்காவை உடனடி-யாக சீரமைக்க வேண்டும்.

ADDED : ஜூலை 28, 2024 03:21 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 03:21 AM

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: வரும் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, நெரூரில் காவிரி-யாற்று பகுதியில் உள்ள கழிப்பிடம் மற்றும் பூங்காவை உடனடி-யாக சீரமைக்க வேண்டும்.

தமிழகத்தில் ஆடிப்பெருக்கு விழா வரும் ஆகஸ்ட், 3 ல் கொண்டாடப்பட உள்ளது. அதில், காவிரியாற்று பகுதிகளில், ஆயிரக் கணக்கான பொதுமக்கள் புனித நீராடுவர். அதற்காக, மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் வினாடிக்கு, 5,000 கன அடி தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக, கரூர் மாவட்டத்தில், காவிரியாறு பகுதிகளான வேலாயுதம்பாளையம், புகளூர், வாங்கல், நெரூர் மற்றும் மாயனுார், லாலாப் பேட்டை, குளித்தலை பகுதிகளில் ஆடிப் பெருக்கு விழா களை கட்டி இருக்கும்.

மேலும், புதுமண தம்பதிகள், ஆற்றில் முளைப்பாரியை விட்டு சுவாமியை வழிபட்டு, சுமங்கலி பெண்கள், ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் கயிறுகளை கட்டி கொள்வது வழக்கம்.

காவிரியாற்று பகுதியான நெரூரில் சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்-டானம் உள்ளது. அங்கு செல்லும் பொதுமக்கள் காவிரியாற்றில் குளித்து விட்டு, அதிஷ்டானத்துக்கு செல்வது வழக்கம். காவிரி-யாற்றின் கரையோர பகுதியில், பொதுமக்கள் வசதிக்காக கழிப்பி-டங்கள், சிறுவர் பூங்கா ஆகியவை பல ஆண்டுகளுக்கு முன் கட்-டப்பட்டது. ஆனால், தற்போது கழிப்பிடங்கள், பூங்கா ஆகி-யவை பராமரிப்பு இல்லாமல் உள்ளன. மேலும், சாலைகளும் குண்டும், குழியுமாக உள்ளது.

ஆடிப்பெருக்கையொட்டி, சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானம் திறக்கப்படும் என்பதால், பொதுமக்கள் காவிரியாற்றில் புனி நீராட செல்வர். இந்நிலையில், ஆடிபெருக்கு விழாவுக்கு இன்னும், ஆறு நாட்களே உள்ள நிலையில், கழிப்பிடம் மற்றும் பூங்காவை சீரமைக்க, கரூர் மாவட்ட நிர்வாகம், நெரூர் தெற்கு பஞ்சாயத்து நிர்வாகம், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவ-சியம்.

      Dinamalar
      Follow us