/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் சர்ச் கார்னர் பகுதியில் ரவுண்டானா அமைக்கப்படுமா?
/
கரூர் சர்ச் கார்னர் பகுதியில் ரவுண்டானா அமைக்கப்படுமா?
கரூர் சர்ச் கார்னர் பகுதியில் ரவுண்டானா அமைக்கப்படுமா?
கரூர் சர்ச் கார்னர் பகுதியில் ரவுண்டானா அமைக்கப்படுமா?
ADDED : பிப் 01, 2024 12:16 PM
கரூர்: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கரூர் சர்ச் கார்னர் பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும்.
கரூர்-சேலம் பழைய சாலையில் சர்ச் கார்னர் அருகே வெங்கமேட்டுக்கு செல்லும், ரயில்வே மேம்பாலம் உள்ளது. மேலும், அதே பகுதியில் வாங்கலுக்கு செல்லும் சாலையும், கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் சாலையும் செல்கிறது. அருகில், அரசு மருத்துவமனையும் உள்ளது. இந்த வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், சர்ச் கார்னர் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.
சில நாட்கள் மட்டும் அந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் பணியில் உள்ளனர். அந்த பகுதியில் விபத்து ஏற்படும் பட்சத்தில், சேலம் பழைய சாலையில், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
சர்ச் கார்னர் பகுதியில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க ரவுண்டானா அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். நெடுஞ்சாலை துறை நிர்வாகம் கண்டு கொள்ள
வில்லை. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அப்பகுதியில் ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.