/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புதிய தார்ச்சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?
/
புதிய தார்ச்சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?
ADDED : செப் 21, 2024 02:54 AM
கரூர்: கரூர் அருகே, புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார்ச்சாலையில், வேகத்தடைகள் இல்லாததால், விபத்து ஏற்படும் அபாயம் உள்-ளது.
கரூர் மாநகராட்சி, வெங்கமேடு காமதேனு நகர் முதல் வாங்கல் சாலை வரை, சமீபத்தில் புதிதாக தார்ச்சாலை மற்றும் இரண்டு பக்கமும், மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து முடிந்தது.
வெங்கமேட்டில் இருந்து வாங்கல் பகுதிக்கு வாகனங்கள் அதிக-ளவில் செல்கின்றன. இந்நிலையில், வெங்கமேடு காமதேனு
நகர்-வாங் கல் புதிய தார்ச்சாலையில், பல இடங்களில் வேகத்த-டைகள் அமைக்கப்படவில்லை. அந்த சாலையில் தனியார் பள்ளி,
பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம், ஏராள-மான வீடுகள் உள்ளன.
வேகத்தடைகள் இல்லாததால், வாகன ஓட்டிகள் அதிவேகத்தில் செல்கின்றனர். இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, வெங்கமேடு காமதேனு நகர், வாங்கல் சாலையில், முக்-கிய இடங்களில் வேகத்தடைகள் அமைக்க, அதிகாரிகள் நடவ-டிக்கை
எடுக்க வேண்டும்.