குளித்தலை அருகே காற்றுடன் மழைமரம், மின்கம்பங்கள் முறிந்து சேதம்
குளித்தலை அருகே காற்றுடன் மழைமரம், மின்கம்பங்கள் முறிந்து சேதம்
ADDED : மே 17, 2026 04:59 AM
குளித்தலை:குளித்தலை பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால், ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்ததில், மின்கம்பங்கள் அடியோடு பெயர்ந்தன.
குளித்தலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான தண்ணீர்பள்ளி, மணத்தட்டை, ராஜேந்திரம், மருதுார், மேட்டுமருதுார், பணிக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால், குளித்தலை அருகே கருர் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள தண்ணீர்பள்ளி. ராஜேந்திரம் பகுதிகளில், 5 மரங்கள் அடியோடு பெயர்ந்து சாலையின் குறுக்கே விழுந்தன.
அப்போது மரத்தை ஒட்டியவாறு சென்ற, மின் கம்பிகள் மீது விழுந்ததால், 5 மின் கம்பங்களும் அடியோடு பெயர்ந்தன. இதனால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. மேலும் குளித்தலை-மருதுார் சர்வீஸ் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.
தீயணைப்பு வீரர்கள், மின்சார பணியாளர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் இணைந்து மரக்கிளைகளை அகற்றிவிட்டு, மின்கம்பங்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
