/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சமைக்கும் போது தீக்காயம் அடைந்த பெண் உயிரிழப்பு
/
சமைக்கும் போது தீக்காயம் அடைந்த பெண் உயிரிழப்பு
ADDED : ஜூலை 31, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், வெள்ளியணை அருகே, சமையல் செய்யும் போது, தீக்காயமடைந்த பெண் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை நொச்சிப்பட்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மனைவி பழனியம்மாள், 50; இவர் கடந்த, 27 காலை வீட்டில் ஸ்டவ்வில் சமைத்து கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக பழனியம்மாள் அணிந்திருந்த உடையில் தீ பிடித்தது. அதில், பலத்த தீக்காயம் அடைந்த பழனியம்மாள், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.