/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெல் நடவு பணியின் போது டிராக்டர் மோதி பெண் பலி
/
நெல் நடவு பணியின் போது டிராக்டர் மோதி பெண் பலி
ADDED : அக் 18, 2025 01:16 AM
குளித்தலை, குளித்தலை அருகே, நெல் நடவு பணியின்போது, டிராக்டர் மோதி பெண் பலியானார். இருவர் காயமடைந்தனர்.
குளித்தலை
அடுத்த குண்டன் பூசாரி கிராமத்தில், கருப்பண்ணன் என்பவருக்கு
சொந்தமான வயலில், நேற்று முன்தினம் மதியம் 2:30 மணியளவில் கொசூர்
பஞ்., சுக்காம்பட்டி கிராமத்தை சேர்ந்த கன்னியம்மாள், 30,
பெருமாள்கவுண்டன்பட்டியை சேர்ந்த வள்ளி, 70, ஓந்தாய், 70, ஆகியோர்
நெல் நடவு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, உழவு பணி
மேற்கொள்ள வந்த டிராக்டர் கன்னியம்மாள் உள்பட மூவர் மீதும் மோதியது.
இதில் ஓந்தாய்க்கு தலையில் பலத்த காயமும். வள்ளிக்கு நெஞ்சு
பகுதியிலும், கன்னியம்மாளுக்கு கை, வயிற்றிலும் காயம் ஏற்பட்டது.
மூவரையும் மீட்டு, மணப்பாறை தனியார் மருத்துவமனையில்
அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி ஓந்தாயி இறந்தார். மற்ற
இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டிராக்டர் டிரைவர்
தப்பி விட்டார்.இது குறித்து, கன்னியம்மாள் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து. விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாங்கலில் தொடர்ந்து பெய்யும் மழை
சேறும் சகதியுமாக மாறிய சுகாதார நிலையம்
கரூர், அக். 18
வாங்கலில்
புதிதாக கட்டி திறக்கப்பட்டுள்ள, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாலை,
மழை காரணமாக சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால், பொதுமக்கள்
அவதிப்படுகின்றனர்.
கரூர் மாவட்டம், வாங்கலில் பொது சுகாதாரம்
மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில், 48 லட்ச ரூபாய் மதிப்பில்,
புதிதாக அரசு சுகாதார நிலையம் கட்டப்பட்டு கடந்த, 2023 நவம்பரில்
திறக்கப்பட்டது. சுகாதார நிலையத்தில், வாங்கல் மற்றும் சுற்று வட்டார
பகுதிகளை சேர்ந்த, பொதுமக்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் என பலர்
சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக கரூர்
மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால்,
வாங்கலில் அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையம் செல்லும் மண் சாலை சேறும்,
சகதியுமாக மாறியுள்ளது. பொதுமக்கள், நோயாளிகள் நடந்து செல்ல கூட
முடியாமல் அவதிப்
படுகின்றனர்.
எனவே, வாங்கல் அரசு ஆரம்ப
சுகாதார நிலையம் செல்லும் மண் சாலையை, தார்ச்சாலையாக மாற்றி அமைக்க,
கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது
அவசியம்.