/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தி.மு.க., கவுன்சிலரின் கணவர் தாக்கியதில் காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதி
/
தி.மு.க., கவுன்சிலரின் கணவர் தாக்கியதில் காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதி
தி.மு.க., கவுன்சிலரின் கணவர் தாக்கியதில் காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதி
தி.மு.க., கவுன்சிலரின் கணவர் தாக்கியதில் காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதி
ADDED : ஆக 19, 2025 01:12 AM
கரூர், கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சி, 15வது வார்டு தி.மு.க., கவுன்சிலரின் கணவர் மற்றும் சிலர் தாக்கியதில், தன் கணவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, புகழூரை சேர்ந்த சித்ரா, 61, என்பவர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
அதில், கூறியிருப்பதாவது: எங்கள் வார்ட்டில் குடிநீர் வரவில்லை. நேற்று முன்தினம் இரவு, 7.00 மணிக்கு புகழூர் சர்க்கரை ஆலை நால்ரோட்டில், தி.மு.க., 15வது வார்டு கவுன்சிலர் சபீனாவிடம், பொதுமக்களுடன் சேர்ந்து தண்ணீர் வரவில்லை என, நானும், என் கணவர் ரவி, 65, கேள்வி எழுப்பினோம். அப்போது கவுன்சிலரின் கணவரும், தி.மு.க., சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளருமான நவாஸ்கான் மற்றும் உடனிருந்தவர்கள் தகராறில் ஈடுபட்டு, என் கணவர் நெஞ்சில் தாக்கியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரை, காப்பாற்ற சென்றவர்களையும் கடுமையாக தாக்கினர். பின் அவரை, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். என்
கணவரின் உடல்நிலை மோசமாக உள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மனு கொடுத்த பின், கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருந்த, சித்ரா மயக்கமடைந்தார். அதன்பின் அவர் மீட்கப்பட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இது குறித்து கவுன்சிலர் கணவரும், தி.மு.க., சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளருமான நவாஸ்கான் கூறுகையில், ''சித்ரா, அவரது கணவர் ரவி ஆகியோர் குடிநீர் பிரச்னை குறித்து கேட்ட போது, அவர்களுக்கு உரிய விளக்கம் அளித்து விட்டேன். அப்போது, வாக்குவாதம் மட்டுமே ஏற்பட்டதே தவிர, ரவியை தாக்கவே இல்லை. அங்குள்ள, 'சிசிடிவி' காட்சி களை ஆய்வு செய்தால் உண்மை தெரியும்,'' என்றார்.