ADDED : செப் 20, 2024 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு பஸ் மோதி
பெண் படுகாயம்
அரவக்குறிச்சி, செப். 20-
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ருக்மணி. இவர் நேற்று கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மலைக்கோவிலுார் அருகே உள்ள குடகனாறு பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த பாலத்தில் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த சிவராஜா என்பவர் ஓட்டி வந்த அரசு பஸ், ருக்மணி மீது மோதியது.
இந்த விபத்தில் ருக்மணி படுகாயம் அடைந்தார். ருக்மணி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. நாகம்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் சித்ரா, இது தொடர்பாக அரவக்குறிச்சி போலீசாருக்கு அளித்த புகார்படி, ருக்மணியை மீட்டு மலைக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.