/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்; கிணற்றில் விழுந்து விபரீத முடிவு
/
கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்; கிணற்றில் விழுந்து விபரீத முடிவு
கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்; கிணற்றில் விழுந்து விபரீத முடிவு
கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்; கிணற்றில் விழுந்து விபரீத முடிவு
ADDED : மார் 12, 2025 07:58 AM
கரூர்: க.பரமத்தி அருகே, கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட பெண், கணவரை பிரிந்து வாழ்ந்தது, போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் சேரகோடு பகுதியை சேர்ந்த சசிகரன் என்பவரது மகள் கிருத்திகா, 22. இவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன், நாகராஜ் என்பவருடன் திருமணம் நடந்தது. இரண்டு வயதில், ஒரு ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்த கிருத்திகா, கோவையில் உள்ள தனியார் மாலில் வேலை செய்து வந்தார். அப்போது, நெய்வேலியை சேர்ந்த சிவா, என்பவருடன் கிருத்திகாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த, கிருத்திகாவின் சகோதரர் தேவேந்திரன், கிருத்திகாவை சில நாட்களுக்கு முன்பு கரூர் அருகே உள்ள, க.பரமத்தியில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். இதனால், மனம் உடைந்த கிருத்திகா, நேற்று முன்தினம் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இத்தகவலை, க.பரமத்தி போலீசார் தெரிவித்தனர்.