/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டூவீலர் மோதிய விபத்தில் பெண்ணுக்கு படுகாயம்
/
டூவீலர் மோதிய விபத்தில் பெண்ணுக்கு படுகாயம்
ADDED : ஜூன் 19, 2024 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி: புன்னம் சத்திரம், பிரேம் நகரை சேர்ந்தவர் சரவணன் மனைவி சுசீலா, 50.
இவர், கரூரிலிருந்து ஈரோடு செல்லும் சாலையில் புன்னம் சத்திரம் அருகே, சாலையை கடக்க முயன்றார். அப்போது, கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள அப்பிபாளையத்தை சேர்ந்த ஆனந்தகுமார், 36, என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூவீலர், சுசீலா மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சுசீலாவை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.சுசீலா மகள் நிர்மலா கொடுத்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார், ஆனந்தகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.