/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பெண் மீது மிளகாய் பொடி துாவி 3 பவுன் தங்க செயின் பறிப்பு
/
பெண் மீது மிளகாய் பொடி துாவி 3 பவுன் தங்க செயின் பறிப்பு
பெண் மீது மிளகாய் பொடி துாவி 3 பவுன் தங்க செயின் பறிப்பு
பெண் மீது மிளகாய் பொடி துாவி 3 பவுன் தங்க செயின் பறிப்பு
ADDED : ஆக 27, 2025 02:37 AM
குளித்தலை, பெண் மீது மிளகாய் பொடி துாவி, 3 பவுன் தங்க செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
குளித்தலை அடுத்த, பஞ்சப்பட்டி பஞ்சு காரைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பிள்ளை, 65. ஆடு மாடுகள் மேய்ப்பவர். கடந்த, 24 மதியம், 3:00 மணியளவில், பஞ்சப்பட்டி ஏரிக்கு மேற்கே உள்ள தனக்கு சொந்தமான தோட்டத்தில்,
கட்டியிருந்த மாட்டை பிடித்துக் கொண்டு, தலையில் சோளத்தட்டை வைத்தபடி, நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத ஒருவர், சின்னப்பிள்ளை கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தங்க செயினை அறுத்துக் கொண்டு, முகத்தில் மிளகாய் பொடியை துாவி, ஏரிக்கரை செல்லும் ஒத்தையடி பாதையில் தப்பினார்.
இதுகுறித்து சின்னப்பிள்ளை மகன் பாலமுருகன், 43, கொடுத்த புகார்படி லாலாபேட்டை போலீசார் வழக்குப்
பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.