/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மகளிர் சுய உதவிக்குழுக்கள் தணிக்கை பட்டய கணக்காளர் விண்ணப்பிக்கலாம்
/
மகளிர் சுய உதவிக்குழுக்கள் தணிக்கை பட்டய கணக்காளர் விண்ணப்பிக்கலாம்
மகளிர் சுய உதவிக்குழுக்கள் தணிக்கை பட்டய கணக்காளர் விண்ணப்பிக்கலாம்
மகளிர் சுய உதவிக்குழுக்கள் தணிக்கை பட்டய கணக்காளர் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 25, 2024 01:34 AM
கரூர்: மகளிர் சுய உதவிக்குழுக்கள் தணிக்கைக்கான, பட்டய கணக்காளர்கள் வரும், 31க்குள் விண்ணப்பிக்கலாம்.கரூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்-கத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், பஞ்., அளவிலான குழு கூட்ட-மைப்புகள், வட்டார அளவிலான குழு கூட்டமைப்புகளின் தணிக்கைக்கான பட்டய கணக்காளர்கள் அல்லது தணிக்கை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
சமுதாய அமைப்பு-களின் கூட்டமைப்புகளின் தணிக்கைக்கு விருப்பமுள்ள பட்டய கணக்காளர்கள் அல்லது தணிக்கை நிறுவனங்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.சுய உதவிக்குழுக்கள், வாழ்வாதார திட்ட நடவடிக்கைகள் போன்-றவற்றில் நல்ல முன் அனுபவம் பெற்றிருக்கவேண்டும். கூடுதல் விவரங்களை https://karur.nic.in/ என்ற இணைய தளத்தில் காணலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இணை இயக்குனர், திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வா-தார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, இரண்டாம் தளம், கரூர் மாவட்டம்- 639 007 என்ற முகவரிக்கு வரும், 31க்குள் தபால் வழியாகவும், நேரிலும் அளிக்கலாம். 04324-257377 9442563538 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

