ADDED : ஆக 18, 2026 04:52 AM
அ நிறம் | அளவு
குளித்தலை; குளித்தலை அடுத்த கம்பைநல்லுார், வி.ஏ.ஓ., சஞ்சீவி, 43; இவர், கிராம உதவியாளர் மணிமேக-லையுடன், கடந்த, 16 மதியம், 12:15 மணிக்கு, பொய்கைபுதுார் காவிரி ஆற்றுப்படுகையில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பொய்கைபுத்துாரை சேர்ந்த கன்னி-யம்மாள், 48, கமுக்காயி, 50, சின்னம்மாள், 42, சித்ரா, 42, அம்முலு, 30, ஆகியோர், சட்டவிரோத-மாக, ஆளுக்கொரு மூட்டையில் மணல் கட்டி விற்பனைக்கு தலையில் சுமந்து சென்றனர். அவர்களை தடுத்து, மண்வெட்டி, மணல் மூட்-டைகளை பறிமுதல் செய்து, லாலாப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், ஐந்து பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
