/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு முளைப்பாரி ஊர்வலம் சென்ற பெண்கள்
/
அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு முளைப்பாரி ஊர்வலம் சென்ற பெண்கள்
அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு முளைப்பாரி ஊர்வலம் சென்ற பெண்கள்
அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு முளைப்பாரி ஊர்வலம் சென்ற பெண்கள்
ADDED : ஏப் 19, 2025 02:23 AM
குளித்தலை:
நாமக்கல் மாவட்டம், புது சத்திரம் மற்றும் சேலம் நெத்திமேடு பகுதியில் வசித்து வரும் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் குடிப்பாட்டுக்காரர்கள், மாமன், மைத்துனர்கள் சார்பில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை குளித்தலை அடுத்த, மேட்டு மருதுாரில் அமைந்துள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு முப்பூஜை செய்வது வழக்கம்.
அதன்படி, நேற்று காலை குடிப்பாட்டுக்காரர்கள், மேட்டுமருதுார் கொடிங்கால் வடிகால் வாய்க்கால் கல்லுப்பாலம் ஆலமரத்தடியில், முளைப்பாரி வைத்து கூடையில பூஜை பொருட்கள் வைத்து, முக்கிய பாதை வழியாக மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.
பின்னர், அம்மனுக்கு பொங்கல் வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.