ADDED : மார் 09, 2024 01:03 AM
கரூர், கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், உலக மகளிர் தின விழா நேற்று மாலை நடந்தது.
அதில், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. பிறகு வெற்றி பெற்ற வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்களின் குழந்தைகளுக்கு, மாவட்ட தலைமை நீதிபதி சண்முக சுந்தரம் பரிசு வழங்கினார். தொடர்ந்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவில் நீதிபதிகள் அம்பிகா, சொர்ண குமார், எழில், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பாக்கியம், வக்கீல் சங்க நிர்வாகிகள் தமிழ்வாணன், வைத்தீஸ்வரன், வக்கீல்கள் ராஜாத்தி, பானுமதி உள்பட பலர் பங்கேற்றனர்.
* கரூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில், அரசு கலைக்கல்லுாரி நுழைவு வாயில் முன், மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அதில், மாணவ, மாணவிகளுக்கு மேற்கு மாவட்ட செயலாளர் நன்மாறன் இனிப்பு வழங்கினார். அப்போது, கரூர் எம்.பி., தொகுதி வேட்பாளர் டாக்டர் கருப்பையா உள்ளிட்ட நிர்வாகிகள்
உடனிருந்தனர்.
