ADDED : நவ 28, 2024 01:10 AM
மகளிர் குழுவினர் கடன் பெற யோசனை
ஈரோடு, நவ. 28-
ஈரோடு மாவட்டத்தில், ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இயங்கி வரும் மகளிர் குழுக்களுக்கான வாழ்வாதாரத்தை முன்னேற்ற, வங்கி கடன் இணைப்புக்கு, 1,109 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது வரை, 707.33 கோடி ரூபாய் இலக்கு எட்டப்பட்டுள்ளது. வங்கி நேரடி கடன் பெற்று தருவதற்கு, கடன் விண்ணப்பங்களுக்கான தர மதிப்பீடு செய்து, வங்கி கிளைகளில் சமர்பிக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் சம்மந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகு, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் தர மதிப்பீடு முகாம் நடக்க உள்ளது.எனவே அனைத்து தகுதியான மகளிர் குழுவினரும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொருளாதார மேம்பாடு அடையலாம். கூடுதல் விபரத்துக்கு, 0424 2257087 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.