/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
/
பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
ADDED : ஜன 26, 2025 04:46 AM
குளித்தலை,: குளித்தலை, அரசு கலைக்கல்லுாரியில், 1,700க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர். இக்கல்லுாரியில், பெண்கள் வன்கொடுமை தடுப்பு குழு மற்றும் இளைஞர் மேம்பாட்டு திட்டம் சார்பில், பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
கல்லுாரி முதல்வர் அன்பரசு தலைமை வகித்தார். உள்ளக புகார் குழு ஒருங்கிணைப்பாளர் கணிதத்துறை தலைவர் உமா-தேவி வரவேற்றார். அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்-பெக்டர் கலைவாணி,' இன்றைய சூழலில், பெண்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்பது பற்றியும், கைபேசிகளை எச்சரிக்கையுடன் பயன்படுத்துவது பற்றியும், ஆபத்தான சூழ்நி-லைகளை தாங்கள் எதிர்கொள்ளும்போது, போலீசாரின் உத-வியை எவ்வாறு அணுகுவது' என்பது குறித்து பேசினார்.குளித்தலை, அரசு தலைமை மருத்துவமனை ஆலோசகர் சுஜாதா, 'பால்வினை நோய்களால் ஏற்படும் ஆபத்து, இவற்றில் இருந்து தற்காத்து கொள்ளும் முறைகள் குறித்து' எடுத்து கூறினார்.
பெண்கள் வன்கொடுமை தடுப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஆங்கிலத்துறை தலைவர் ஹில்டாதேன்மொழி, மாணவியருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசினார்.
இளைஞர் மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் பத்மப்பி-ரியா நன்றி கூறினார்.
தமிழ் துறை தலைவர் ஜெகதீசன், உடற்கல்வி பொறுப்பு இயக்குனர் பேராசிரியர் வைரமூர்த்தி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

