வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடக்கம்
வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடக்கம்
ADDED : ஏப் 14, 2026 04:14 AM
அ நிறம் | அளவு
கரூர் :ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி நடக்கிறது என, மாவட்ட தேர்தல் அலுவலர் ரவிகுமார் தெரிவித்தார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் வரும், 23ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. கரூர் மாவட்டத்தில், 4 தொகுதிகளிலும், 8,51,690 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் தங்களுடைய ஓட்டை பதிவு செய்ய ஏதுவாக, 1,111 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு, வீடாக சென்று பூத் ஸ்லிப் வழங்கும் பணி வரும், 18 வரை நடக்கிறது. இதற்காக வாக்காளர்களிடம் கையெழுத்து பெறப்படுகிறது. பூத் ஸ்லிப்பில் வாக்காளர் வரிசை எண், பகுதி எண் ஆகியவை பெரிய எழுத்தாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கியூ.ஆர். குறியீடும் இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
