/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இடையூறு மரக்கிளைகள் அகற்றும் பணி தீவிரம்
/
மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இடையூறு மரக்கிளைகள் அகற்றும் பணி தீவிரம்
மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இடையூறு மரக்கிளைகள் அகற்றும் பணி தீவிரம்
மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இடையூறு மரக்கிளைகள் அகற்றும் பணி தீவிரம்
ADDED : மே 15, 2025 01:39 AM
கரூர் :கரூர், மாரியம்மன் கோவில் திருவிழாவில் நாளை பூச்சொரிதலை முன்னிட்டு, பூத்தட்டு வாகனங்கள் செல்ல வசதியாக, சாலையில் வளர்ந்துள்ள மரக்கிளைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.
கரூரில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில், ஆண்டு
தோறும் சித்திரை மாத கடைசியில் திருவிழா தொடங்கி, வைகாசி மாதத்தில் முடிவடையும். கடந்த, 11ல், மாரியம்மன் கோவிலில் கம்பம் நடப்பட்டது. நாளை (16 ம் தேதி) பூச்சொரிதல் விழா, 18ல் காப்பு கட்டுதல், 26ல் தேரோட்டம், 27ல் மா விளக்கு ஊர்வலம், பால் குடம் ஊர்வலம், அக்னி சட்டி எடுத்தல், 28ல் கம்பம் அமராவதி ஆற்றுக்கு செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள்
நடக்கின்றன.
ஜூன், 5ல் பஞ்ச பிரகாரம், 6ல் புஷ்ப பல்லக்கு, 7ல் ஊஞ்சல் உற்சவம், 8ல் அம்மன் குடிபுகுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. நாளை நடக்கும் பூச்சொரிதல் விழா, கரூர், வெங்கமேடு, தாந்தோன்றிமலை, பசுபதிபாளையம், காந்திகிராமம் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் இருந்து, 47 பூத்தட்டுகள் வாகனங்களில் எடுத்து வரப்படும். பூத்தட்டு வாகனங்கள் வரும் இடங்களில், பல இடங்களில் சாலையோரம் உள்ள மரத்தின் கிளைகள், மின் ஒயர் செல்லும் மின்தட பாதையை ஒட்டியும், தேரோட்டத்திற்கு இடையூறாகவும் வளர்ந்திருந்தன.
இந்த வாகனங்கள் தடையின்றி செல்லும் வகையில், கரூர் மாநகராட்சி, மின்வாரிய ஊழியர்கள் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பூத்தட்டு செல்ல இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாலையின் குறுக்கே நீண்டு வளர்ந்துள்ள மரக்கிளைகளை அகற்றி வருகின்றனர்.