/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணி மும்முரம்
/
சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணி மும்முரம்
ADDED : நவ 20, 2025 02:01 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி நெடுஞ்சாலை துறை சார்பில், ராமநாதபுரம் காவிரி குடிநீர் திட்டத்திற்காக பறிக்கப்பட்ட சாலையை, சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அரவக்குறிச்சியில், ராமநாதபுரம் காவிரி குடிநீர் திட்டத்திற்காக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெரிய அளவில் குழிகள் தோண்டப்பட்டு, ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது. கடந்த ஆறு மாதங்
களுக்கு முன்பு முடிக்கப்பட்ட அப்பணிகளால், அரவக்குறிச்சியின் பல்வேறு சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
இந்நிலையில், சாலையை சீரமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. அரவக்குறிச்சி அருகே ஆண்டிமேடு பகுதியில், சாலை சீரமைக்கும் பணியை அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கர்ணன், உதவி பொறியாளர் வினோத்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

