/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போத்துராவுத்தன்பட்டியில் நிழற்கூடம் பணி விறுவிறு
/
போத்துராவுத்தன்பட்டியில் நிழற்கூடம் பணி விறுவிறு
ADDED : நவ 22, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த போத்துராவுத்தன்பட்டி கிராமத்தில் பஸ் ஸ்டாப் உள்ளது. இந்த பஸ் ஸ்டாப் வழியாக கிராம மக்கள் குளித்தலை, பஞ்சப்பட்டி, கொசூர் பகுதிகளுக்கு பஸ்சில் சென்று வருகின்றனர்.
பஸ் ஸ்டாப் பகுதியில் போதுமான நிழற்கூட வசதி இல்லாததால், பயணிகள் வெயில், மழையில் தவித்து வந்தனர். தற்போது பஞ்., நிர்வாகம் சார்பில் புதிய நிழற்கூடம் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. பணிகள் முடிந்ததும் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.

