தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யும் பணி

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யும் பணி

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யும் பணி


ADDED : ஏப் 11, 2026 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 05:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர் : கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் ரவிகுமார் தலைமை வகித்தார்.

பின், அவர், கூறியதாவது:

நான்கு சட்டசபை தொகுதி வாரியாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், சமவாய்ப்புக்கு உட்படுத்தும் நடைமுறையில், கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நடைமுறை முடிந்த பின், தொகுதி வாரியாக கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் பட்டியல், மாவட்ட தலைமையகங்களிலுள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் வழங்கப்படும். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், சம்மந்தப்பட்ட தொகுதிகளில் அமைந்துள்ள பாதுகாப்பு அறைகளில் இருப்பு வைக்கப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட தேர்தல் அலுவலர் விமல்ராஜ், தேர்தல் அலுவலர்கள் சுவாதி ஸ்ரீ (குளித்தலை), சக்தி பால கங்காதரன் (கரூர்) முருகேசன் (அரவக்குறிச்சி) சிவக்குமார் (கிருஷ்ணராயபுரம்) உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us