/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பஸ் பாடி கட்டும் நிறுவனத்தில் தொழிலாளி மயங்கி விழுந்து பலி
/
பஸ் பாடி கட்டும் நிறுவனத்தில் தொழிலாளி மயங்கி விழுந்து பலி
பஸ் பாடி கட்டும் நிறுவனத்தில் தொழிலாளி மயங்கி விழுந்து பலி
பஸ் பாடி கட்டும் நிறுவனத்தில் தொழிலாளி மயங்கி விழுந்து பலி
ADDED : ஜூலை 21, 2025 04:45 AM
கரூர்: க.பரமத்தி அருகே, தனியார் பஸ் பாடி கட்டும் நிறுவனத்தில், மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், புகழூரில் உள்ள மருதப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 50; திருமணம் ஆனவர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த, 10 ஆண்டுகளாக மனைவியை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், க.பரமத்தி அருகே காருடையாம்பாளையத்தில் உள்ள, தனியாருக்கு சொந்தமான ஸ்டார் பஸ் பாடி கட்டும் நிறுவனத்தில் முருகேசன், வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம், பஸ் பாடி கட்டும் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த முருகேசன், திடீரென மயங்கி விழுந்தார். அப்போது, அருகில் இருந்தவர்கள் முருகேசனை மீட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால், முருகேசன் உயிரிழந்தார். க.பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.