/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டேங்கர் லாரியில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு
/
டேங்கர் லாரியில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு
ADDED : டிச 20, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டேங்கர் லாரியில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு
கரூர், டிச. 20-
தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்தவர் சுரேஷ், 54. சின்னதாராபுரம் அருகில், சின்ன தாதம்பாளையத்தில் உள்ள தனியார் மினரல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். அங்கு, டேங்கர் லாரியில் தண்ணீர் வினியோகம் செய்துள்ளார்.அதன்பின், டேங்கர் லாரியில் மேல் உள்ள மூடியை மூட சென்ற போது தவறி விழுந்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த அவர், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். க.பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.