/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பைக் மீது தனியார் டவுன் பஸ் மோதி தொழிலாளி உயிரிழப்பு
/
பைக் மீது தனியார் டவுன் பஸ் மோதி தொழிலாளி உயிரிழப்பு
பைக் மீது தனியார் டவுன் பஸ் மோதி தொழிலாளி உயிரிழப்பு
பைக் மீது தனியார் டவுன் பஸ் மோதி தொழிலாளி உயிரிழப்பு
ADDED : மார் 05, 2025 07:15 AM
குளித்தலை: பைக் மீது, தனியார் டவுன் பஸ் மோதி கூலி தொழிலாளி உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், இனாம்புலியூர் கிழக்குமேடு பகுதியை சேர்ந்தவர் பூபதி, 38, விவசாய கூலி தொழிலாளி. தனக்கு சொந்தமான ஹீரோ ஹோண்டா சிடி டீலக்ஸ் பைக்கில், அதே ஊரை சேர்ந்த சுரேஷ், 41, என்பவரை பின்னால் அமர வைத்து நேற்று காலை, 8:30 மணியளவில் நங்கவரம் சமுதாய கழிப்பிடம் அருகே சென்றபோது, திருச்சி சத்திரத்திலிருந்து நச்சலுார் வந்த தனியார் டவுன் பஸ் பைக் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே பூபதி பலியானார்.
தகவல் அறிந்த நங்கவரம் போலீசார், சடலத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சுரேஷ், 41, கொடுத்த புகார்படி, தனியார் டவுன் பஸ் டிரைவர் நச்சலுார் பூக்குழியை சேர்ந்த பாலகிருஷ்ணன், 46, மீது, நங்கவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.