ADDED : செப் 06, 2025 01:24 AM
குளித்தலை ஊமாயனுார் அருகே, மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தார்.
குளித்தலை அடுத்த, கீழ முனையனுாரை சேர்ந்தவர் சித்தலவாய் பஞ்., முன்னாள் தலைவர் பழனியப்பன் மகன் சந்தோஷ், 22. இவர், கோவில் திருவிழாக்களில் மின் விளக்குகள் மற்றும் மைக் செட் அமைத்து பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மேலமாயனுாரில் கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக, மைக் செட் அமைத்து கண்காணித்து வந்தார். மாலை நேரத்தில், குறைந்த மின்அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டுள்ளதா என பார்த்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.மாயனுார் போலீசார் அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை செய்து வருகின்றனர்.