ADDED : மே 11, 2026 03:29 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர்
மாவட்டம், தான்தோன்றிமலை அசோக் நகர், இரண்டாவது கிராஸ் பகுதியை
சேர்ந்தவர் ஆனந்த், 24; இவர் ராயனுார் பகுதியை சேர்ந்த ரவி
என்பவரிடம், கூலி வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம், ரவி,
ராயனுாரில் வசந்தம் நகரில் புதிதாக கட்டி வரும் வீட்டில், ஆனந்த்
எலக்ட்ரிகல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மின்சாரம்
தாக்கியதில் ஆனந்த் உயிரிழந்தார். இதுகுறித்து, ஆனந்தின் தந்தை
மாரியப்பன், 64, கொடுத்த புகார்படி, தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
